கடந்த மாதம் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில்,கிராமத்துப் பின்னணியில் மதுரை திண்டுக்கல் அருகே உருவாகி வந்த ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு, அனைவரும் .ஆச்சரியப்படும் வகையில் வெறும் 33 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பியுள்ளனர். இதில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இவர்களுடன் மற்றொரு நாயகியாக நந்திதா மற்றும் . பால சரவணன், முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப் படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளதாவது, இது கிராமத்து பின்னணியில் உருவான கதை பொதுவா,கோயில்கள் இருக்கும் இடத்தில் விஐபிக்களோ, அவர்கள் குடும்பத்தினரோ வரும்போது, அவர்களை பத்திரமாகக் கூட்டிக்கொண்டு செல்ல சிலர் இருப்பார்கள். அப்படியான கேரக்டரில் சிம்பு நடிக்கிறார்.
லாக்டவுனில் நடக்கும் கதைதான். குடும்ப கதையில் காமெடி, காதல் சேர்த்து உருவாக்கி இருக்கிறேன்.படத்தில் நிதி அகர்வாலும் நந்திதா ஸ்வேதாவும் அக்கா தங்கையாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கேரக்டரும் ரசிக்கும்படியாக இருக்கும். சிம்பு ஒரே டேக்கில் ஓகே பண்ணிவிடுவார். நான்கு மணி நேரம் ஷூட்டிங்கில் இருந்தால் இரண்டு காட்சிகளை எளிதாக எடுத்துவிடலாம்’ என்று கூறியுள்ளார், சுசீந்திரன்.இப்படத்தின் ஒளிப்பதிவை, திரு கவனிக்க, தமன் இசை அமைத்து வருகிறார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.