விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் .இந்த படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கிறார் .மெட்ரோ பட புகழ் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் விஜய் ஆண்டனியின் 14 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படத்தின் ஒளிப்பதிவை,என்.எஸ். உதயகுமார் கவனிக்க,நிவாஸ் கே பிரசன்னா.இசையமைத்து வருகின்றனர் .