தமிழ்த்திரையுலகில் 1999-ல் ஜோடி படத்தில் நடிகையாக அறைமுகமானவருக்கு உடனடி ஜாக் பாட்டாக 2002 ல் அமீர் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த மௌனம் பேசியதே படம் அமைந்தது அன்று முதல் இன்று வரை கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா தனது திருமணம் பற்றி கூறியுள்ளதாவது,”என் திருமணம் பற்றியா கேள்விக்கு பதில் சொல்லி புளித்துபோய் விட்டது. எனது திருமணம் குறித்து ஏற்கனவே நான் முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்.எனக்கூறியுள்ளார். முன்பு தெலுங்கு நடிகர், ராணா டக்குபதியை அவர் காதலிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த காதல் முறிந்து போக,படத்தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்து அதுவும் திருமணம் வரை சென்று நின்றுபோனதும் குறிப்பிடத்தக்கது.