ஓட்டு கிடைக்குமோ ,கிடைக்காதோ அதைப்பற்றிய கவலை இல்லாமல் கோடம்பாக்கத்து பிரபலங்களை அள்ளுவதில் குறியாக இருக்கிறது பா.ஜ.க .
ஏற்கனவே அள்ளப் பட்டவர்களில் குஷ்புவைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு ஒர்த் கிடையாது.! இதனாலேயே என்னவோ பெரிய பிரபலங்களுக்கு தற்போது குறி வைத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் ,பிரபல இயக்குநர்களை குறி வைத்திருக்கிறது.
தற்போது கோடம்பாக்கத்தில் சகலகலாவல்லவன் டி .ஆர் , வைகைப்புயல் வடிவேலு ஆகிய இவரைப்பற்றிய பரபரப்பு தீயாக எரிந்து கொண்டிருக்கிறது.
முதலில் டி .ஆரை பற்றிய செய்தியை பார்க்கலாம்.
அடித்துவிடுவார்கள் போலிருந்தது டி .ஆர் .வீட்டில்,! பிஜேபியில் சேருவார் என்பதே வடிகட்டிய பொய் என்றாகி விட்டது.
வடிவேலு?
போனை எடுத்தால்தானே தெரிந்து கொள்ள முடியும்..அரசியலில் அவர் பட்ட காயத்தின் தழும்பு இன்னும் மறையாமல்தான் இருக்கிறது என்கிறார்கள் அவரை சார்ந்தவர்கள்.