தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான, செல்வராகவன், முதல் முறையாக நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளது அருண் மாதேஸ்வரனின் சாணி காகிதம் படத்துக்காக. கடந்த சில மாதங் களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,கையில் கத்தியுடன் செல்வராகவன் நிற்பது போன்றும், துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ் நிற்பது போன்றும் இவர்கள் முன் ரத்த கறையுடன் வேன் ஒன்றும், சில நபர்களும் நிற்பது போன்ற காட்சியும் இடம் பெற்று இருந்தது.இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில்,தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளை தரையில் அமரவைத்து, அவர்களின் முன்பு,பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஆயதங்களையும் போட்டு போலீசார் புகைப்படங்கள் எடுப்பார்களே அது போல அரைக்கால் டவுசருடன் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ரத்தக்கறையுடன் அமர வைக்கப்பட்டு இருக்கும் காட்சி இடம் பெற்று உள்ளது.இப்படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.