ஒரு நாள் பயணமாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பாஜக அரசியல் வியூக சாணக்கியன் அமித்ஷா ரஜினியை அரசியலில் இணைக்கும் புதிய திட்டத்துடன் வருகிறார் என்கிறார்கள் . இது குறித்த தகவல், நிதின்கட்கரி மூலம் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போயஸ் இல்லத்தில் ரஜினி – அமித்ஷா சந்திப்பின் போது , ரஜினியின் அரசியல் நேரடி பயணத்திட்டம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும், அந்த புதிய திட்டத்திற்க்கு ரஜினி இசைவு தெரிவிப்பார் எனவும் பஜக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.