வெற்றிகரமாக அதிக அளவில் பார்வையாளர்களை பெற்று வரும் சூரரைப் போற்று படத்தில் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமாக நடித்திருந்தவர் ஷேக்மைதின் .உடுமலைப்பேட்டை பிரபலம்.
ஜனாதிபதி மேல் அபரிமிதமான பற்றும் பாசமும் கொண்டவர். அவரைப்போல முடி அலங்காரம் செய்து கொள்பவர். அசப்பில் பார்த்தால் முன்னாள் குடியரசுத் தலைவரைப் போலவே இருப்பார்..இதனால் ஷேக் மைதீனுக்கு உடுமலை கலாம் என்கிற செல்லப்பெயர் உண்டு. அவரை சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக பயன் படுத்தியிருந்தார்கள்.
ஆனால் என்ன துரதிருஷ்டம் என்றால் படம் வெளியாவதற்கு முன்னரே இயற்கை அடைந்து விட்டார். தன்னுடைய பிம்பத்தை திரையில் பார்க்காமலேயே இறந்து விட்டார். உடுமலைப்பகுதி மக்கள் இதைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள்.