பழனி ரெயில்வே பீடர்ரோட்டை சேர்ந்தவர் நடராஜன் இவருக்கு இவருக்கு பழனியில் சொந்தமாக தியேட்டர் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி,மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே இடத்தகராறு இருந்துவந்தது.இந்நிலையில், இன்று காலை பழனிச்சாமி,மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும், நிலத்தகராறு தொடர்பாக நடராஜன் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அவர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தை முற்றி,வாக்குவாதம் ஏற்பட்ட து கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதில் ஆ த்திரம் அடைந்த நடராஜன் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து பழனிச்சாமி, மற்றும் சுப்பிரமணிஆகியோரை நோக்கி சுட்டார். இதில் பழனிச்சாமியின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. சுப்பிரமணியனின் பின் தொடையில் காயம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது கு றித்து பழனி டவுண் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி,தியேட்டர்அதிபர் நடராஜன் மீதுவழக்குப்பதிவு செய்து அவரைதேடி வருகிறார்கள்.இந்த சம்பவம்அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.