தமிழில்,தனுசுடன் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ‘வெள்ளாவி’ நடிகை டாப்ஸி. இந்தப் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.தமிழில்இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து, அனபெல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் டாப்ஸியும் விஜய் சேதுபதியும் இரட்டைவேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில்,தான் நடிக்க வந்த புதிதில்,தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் பற்றி கூறியிருப்பதாவது: “ஒரு பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் செய்யப்பட்டேன்.ஆனால் அந்த ஹீரோவின் மனைவிக்கு என்னை பார்த்து ஏதோ எரிச்சல்.அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்பதற்காக என்னை அந்த ஒரு படத்தில் இருந்து காரணம் எதுவுமே கூறாமல் என்னை நீக்கி விட்டனர். ஒரு முறை நான் டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போது, ஹீரோவுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை.உடனடியாக என்னை மாற்றி பேச சொன்னார். நான் மறுத்துவிட்டேன். பிறகு அடுத்த சில நாட்களில் எனக்குத் தெரியாமல் வேறு ஒரு டப்பிங் கலைஞரை வைத்து மாற்றினார்.
இன்னொரு படத்தில், ஹீரோவின் காட்சியை விட எனது அறிமுகக் காட்சி செமையாக இருந்தது. ஆனால் ஹீரோ அதையும் மாற்றினார். அந்த ஹீரோ நடிப்பில் இதற்கு முன் வெளியான முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக, இப்போது அவருடன் நான் நடிக்கும் படத்தின் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள்.இந்த மாதிரி நிறைய சம்பவங்களை எல்லாம் கடந்துதான் வந்திருக்கிறேன்.அதே மாதிரி கதாநாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்கும் நடிகைகளை, சில ஹீரோக்கள், தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க ரொம்பவே தயங்குகிறார்கள்.என கூறியுள்ளார்.