கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் படம் ‘மாரி 2’. இப்படத்தில்,யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலானது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார்.
மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினறால் வெளியிடப்பட்டது.இந்நிலையில், தற்போது இப்பாடல் (1 பில்லியன்) 100 கோடி பார்வைகளை கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்கு படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.