தெறி’ இசை விழாவில் விஜய் பேசியதாவது, ‘எனது தாய் தந்தைக்கு பிறகு நான் அதிகம் மதிப்பு கொடுப்பது தாணுவுக்குத்தான், ‘தெறி’ படத்தை பொறுத்தவரை என்னுடைய படத்தை நானே பெருமையாக பேச விரும்பவில்லை. பொதுவாக ஒரு ஆடியோ விழாவில் இசையமைப்பாளர்தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த விழாவில் ஹீரோவே இசையமைப்பாளராக உள்ளார். அவருடைய இசை இந்த படத்தின் பெரிய பலம்,
என்னுடைய ரசிகர்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். உங்களது முந்தைய சாதனையை நீங்கள்தான் உடைத்தெறிய வேண்டும். அதே நேரத்தில் உங்கள் வெற்றியை பார்த்து நீங்களே பெருமை படாதீர்கள். அடுத்தவன் வைத்த இலக்கை நீ அடையனும்னு நினைக்காதே, நீ வைத்த இலக்கை அடுத்தவன் அடையனும்னு நினைக்கனும்.இவ்வாறு அவர் பேசினார்.