கவிஞர் சினேகன் , நடிகர், பாடகர் என்பது மட்டுமில்லாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பாளராகவும் உள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு திருமயம் அருகே சவேரியார்புரத்தில் சினேகன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சினேகன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இவ்விபத்தில், விபத்தில் அருண் பாண்டியன் என்பவர் காயமடைந்தார்.இவ்விபத்து குறித்து விசாரித்த திருமயம் போலீசார் சினேகன் மீது, கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்திய உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.