நடிகை குஷ்பூ சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிரடியாக பாஜகவில் இணைந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நடிகை குஷ்பூ. செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே .காரில் சென்று கொண்டிருந்த போது , திடீரென குஷ்பூ சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும், காரில் அமர்ந்து இருந்த குஷ்புக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இவ்விபத்து குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், ‘கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.