அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது தான் பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை.ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை.இதில், நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.’பப்கோவா’ வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.சாந்தன் இசையமைத்துள்ளார்.