உடம்பில் இன்னும் எத்தனை கட்டுப்போட்டாலும் சரி , உடலுக்குள் எத்தனை பிளேட்டுகளை இறக்கினாலும் சரி ,சண்டைக் காட்சிகளில் ‘டூப்’ போடமாட்டேன் என்கிற வைராக்கியமோ என்னவோ ‘தல’ அஜித் அடிக்கடி விபத்துகளில் மாட்டிக் கொள்கிறார்.
‘வலிமை’ அடுத்து வரவிருக்கிற படம். எச்.வினோத் இயக்கம். பாலிவுட் போனிகபூர் தயாரிப்பு. கோவிட் 19 காரணமாக படப்பிடிப்பு அரை வருடத்தை முழுங்கி விட்டது.தற்போதுதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரளவுக்கு நடிகர்கள் வருகிறார்கள் படப்பிடிப்புக்கு!
அப்படி படப்பிடிப்புக்கு வந்தவர்களில்,தல அஜித் , சிலம்பரசன் டி.ஆர் , விஷால் ,உள்ளிட்ட சிலர் முக்கியமானவர்கள்.
ஹைதராபாத்தில் நடந்த வலிமை படப்பிடிப்பில் மோட்டார் பைக் விரட்டலில் தல அஜித் டூப் போடாமல் நடித்திருக்கிறார். யாரும் எதிர்பாராத வகையில் விபத்து நடந்து விட்டது. அதில் அஜித்துக்கு காயம் . உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அங்குள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார்.ஒரு மாதம் ஓய்வுக்கு பிறகு மறுபடியும் படப்பிடிப்புத் தொடரும்.