சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. அகடு என்றால் பல அர்த்தம் உண்டு. வயிறு என்று சொல்லலாம். பொல்லாங்கு என்றும் சொல்லலாம். இவர்கள் என்ன சொல்கிறார்களோ? கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா ,அதுவும் முருகன் பெயர் உள்ள காரில் செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலில்தான் முருகனை பாடாய் படுத்துகிறார்கள் என்றால் சினிமாவிலுமா?
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.