சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில்
“எஸ்பிபி ஸ்டூடியோ” என்ற பெயரில் டப்பிங் ஸ்டூடியோ
இன்று சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் ,
டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த உலகப்புகழ் பெற்ற மறைந்த பாடகர் .எஸ.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவாக ….
“எஸ்பிபி ஸ்டூடியோ” என்று பெயரில் , ஒரு டப்பிங் ஸ்டூடியோவினை,டப்பிங் யூனியன் தலைவர் .டத்தோ ராதாரவி தலைமையில் ,செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் .எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது ,அவரது நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என்று ,டப்பிங் யூனியன் தலைவர் டத்தோ ராதாரவி கூறிஇருந்தார். அதன்படி ,இன்று அவரது பெயரிலானடப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.