அழுது புரண்டு ரத்தக்கண்ணீர் வடித்தாலும் பாழும் ஆளுநரின் மனம் இறங்கியபாடாக இல்லை. ஆளும் வர்க்கமும் அதற்கான முனைப்புடன் செயல்படுவதாக இல்லை..
எல்லாமே கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது.
இத்தகைய சூழலில்தான் தேர்தலை முன்னிட்டு சென்னைக்கு வ்ருகிற இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கவனத்தை ஈர்க்கிறவகையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
வணக்கம்
எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை..
ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும் , தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக , ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி
ஒரு விடியற்காலை
பொழுதுக்காக
கண்ணீர் மல்க
காத்திருப்பது
வேதனைக்குரியது..
மதிப்புக்குரிய ஆளுனர்
மற்றும் ஆட்சியாளர்களே
மன்றாடிகேட்கிறோம்
மனதுவைங்கள்..
உடனே விடுதலை தாருங்கள்.
அன்புடன்
பாரதிராஜா
20.11.2020