அப்துல் காலிக்.
முகத்தில் குருதி வடிய தொழுகை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
நெற்றியின் மத்தியில் புல்லட்டா,பொட்டா ?
அந்த கடமை தவறாத இசுலாமியன் சிந்தும் ரத்தத்துக்கு யார் பொறுப்பேற்பது?
அரசியலா,சமூகமா,விரோதிகளா .துரோகிகளா ?
யார் பொறுப்பு?
இன்றைய அரசியலை நினைவு படுத்துகிற வகையில் மாநாடு படக்குழுவினர் ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர்.
சிலம்பரசன்தான் அந்த இசுலாமிய இளைஞன் அப்துல் காலிக் .அவரது முகத்தில்தான் ரத்தம் வழிகிறது .அவரது ரசிகர்களுக்கு மனம் வலிக்கிறது.
இயக்குநர் வெங்கட்பிரபுவின் கற்பனைதான் என்றாலும் அந்த கேரக்டர் என்ன சொல்ல வருகிறது.? பிஜேபியின் சாணக்கியன் என சொல்லப்படுகிற அமித்ஷா சென்னை வருகையைத் தொடர்ந்து இத்தகைய போஸ்டர் வெளியாகிறது என்றால் அரசியல் இல்லாமலா?
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் மாநாடு படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.