காதலிக்கிறபோது கன்னாபின்னாவென காதலனுடன் சுற்றுவது ,பிறகு காதல் அச்சாணி இற்று உடைந்தபின்னர் ‘அந்த படத்தைப் போடாதே, இந்தப் படத்தைப் போடாதே’ என்று கதறுவது…..இது திரை உலகில் சகஜம்தான்.
தற்போது இப்படி கதறி கோர்ட்டில் தடை வாங்கியிருப்பவர் அமலாபால்.
காதலித்து கல்யாணம் செய்தவர் அமலாபால். இவரது காதல் திருமணத்தின் கதாநாயகர் இயக்குநர் ஏ எல் விஜய். கட்டுப்பாடான குடும்பத்தை சேர்ந்தவர்.சில ஆண்டுகள் வாழ்ந்து முடிந்தபின்னர் முறைப்படி டைவர்ஸ்.
அமலாபால் பிரிந்தார். இந்த காலகட்டத்தில்தான் வடநாட்டு பின்னணிப்பாடகர் பவநிந்தர் சிங் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் லிப்லாக் வரை போனார்கள். கல்யாணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் படங்கள் வெளியாகின.
அடிக்கடி இருவரும் இணைந்து கொண்ட படங்களை வெளியிட்டு வந்தார்கள்.
என்ன நேர்ந்ததோ…பவனிந்தர் ,பாவ நிந்தர் ஆனார்.!
தன்னுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படங்களை அவர் வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அமலாவுக்கு சாதகமாக நீதிமன்றமும் தீர்ப்பு அளித்திருக்கிறது.