நடிகை சமந்தா நடத்தும் சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராணா, அதில் தனது கடந்த கால உடல்நல குறைவு பற்றி கண்ணீர்விட்டபடி முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து சாம் ஜாம் நிகழ்ச்சியில், நடிகர் ராணா கூறுகையில், ‘ இதயத்தை சுற்றியுள்ள பகுதியில் கால்சியம் அதிகளவில் படர்ந்து இருந்தது. சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால், ஸ்டிரோக் அல்லது ரத்த இழப்பு ஏற்பட 70 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும் 30 சதவிகிதம் நேரடி மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் என்னிடம் சொன்னார்கள்’ என்று கூறினார்.இதையடுத்து நடிகை சமந்தா, உங்களை சுற்றி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கடினமான பாறை போன்றவர். அதை நான் எனது கண்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு இன்றும் சூப்பர் ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் ராணா கூறிய அதிர்ச்சி தகவல் பலரையும் கண்ணீர் விட வைத்தது.