கோவிட் 19- சினிமா பிரபலங்களை வாட்டி வளவெடுத்ததால் மொத்த சினிமா உலகமும் ஆடிப்போய் இருக்கிறது. யாராவது தும்மினாலும் கிலோ மீட்டர் தூரம் ஓடி ஒளிகிறார்கள். முகமூடி படத்தின் வழியாக தமிழுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
தற்போது தெலுங்கில் செம வேட்டையாடுகிறார். தமிழில் மீண்டும் ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பதாக சொல்கிறவர் அண்மையில் இத்தாலி போயிருந்தார். அங்கு ஷூட்டிங் முடிந்ததும் ஹைதராபாத் திரும்பியவர் அகில் நடிக்கும் ஒரு படப் பிடிப்பில் கலந்து கொண்டார்.
முதல் நாள் ஷூட்டிங் முடிந்தது.
மறுநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
“எனக்கு லேசான இருமல் இருக்கு..சளி தொல்லையும் இருக்கு” என்று கேசுவலாக சொல்ல ,அது எப்படியோ இயக்குனர் காதுக்குப் போய் விட்டது.
அவ்வளவுதான் ! அலறி விட்டார்கள் அத்தனை பேருமே!
ஷூட்டிங் கேன்சல்.!
இதுதான் வாய்ப்பு என்று காத்திருந்த பூஜா ஹெக்டே பறந்து விட்டார் மும்பைக்கு! தற்போது ஃபுல் ரெஸ்ட்.!