“ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும்,சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன் அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்.சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு+அர்த்தங்கெட்ட வேகமது.இன்று.தொடர்ச்சி…”
இது பார்த்திபனின் டிவிட்டர் பதிவு.
நிவர் புயல் அறிவிப்புக்கு மத்தியில் வந்த அவரது அச்சம் கலந்த பதிவு. இந்த அறிவிப்புக்குக் கீழே மகள் கீர்த்தனாவுடன் நிற்கிற படம்.
உலகம் அழியும் நிலை ஏற்பட்டால் எவருமே உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கப்போவதில்லை.
ஆனால் அத்தனை பேரும் மனைவி மக்களுடன் சேர்ந்து மடியும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.
மகளோ,மகனோ, அவரவர் குடும்பமுடன் வாழ்கிற நிலை இருக்கலாம். வெவ்வேறு இடங்களில் இருக்கக்கூடும். தந்தையுடன் சேர்ந்து வாழ்கிற வாய்ப்பு குறைவே.!
பார்த்திபனின் பதிவு அவரது குடும்பத்து பாசத்தை காட்டுகிறது. ரத்த உறவுகளின் அழுத்தமான அன்பினை உணர்த்துகிறது.
இது நமது கருத்து. அதாவது எனது சிற்றறிவுக்கு ஏற்ப சிந்தித்தது.ஆனால் பார்த்திபனின் கருத்து மாறுபடலாம்.