தீபாவளி வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் விஜய்யின் மாஸ்டர்.
விஜய்யின் நெருங்கிய உறவினர் பிரிட்டோ தயாரிப்பாளர் லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள பிரமாண்டமான படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக அதிரடியாக களம் காணுகிற படம். இதனால் விஜய் -விஜய்சேதுபதி ஆகிய இருவரது ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால் கொரானா கொள்ளை நோய் காரணமாக தியேட்டரின் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும் என்கிற நிபந்தனையுடன் படங்களை திரையிட அரசு கட்டளையிட்டிருக்கிறது. இதனால் பெரும் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படங்களை தியேட்டரில் வெளியிட தயாரிப்பாளர்களு தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருகிறார்கள்.
சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக மக்களால் பார்க்கப்பட்டுவருகிறது. மேலும் பலர் ஓடிடி தளத்தையே விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்துக்கு விற்று விட்டதாக ஒரு தகவல் பரபரப்புடன் பரவி வருகிறது. ஆனால் விஜய்யின் உறவினரான பிரிட்டோவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற தயாரிப்பாளர்கள் மாறுபட்ட கருத்தில் இருக்கிறார்கள். அமேசானில் விற்று விட்ட படத்தை எப்படி விற்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள் .
ஆனால் லலித்குமார் தற்போது இந்த பரபரப்பு தகவலை கடுமையாக மறுத்திருக்கிறார்.. தியேட்டரில் மட்டுமே மாஸ்டர் ரிலீஸ் என்கிற செய்தியை பகிர்ந்திருக்கிறார் .இதனால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.