சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் மறைந்த ‘ஜெ’வின் உயிர்த்தோழி சசிகலா, வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுநாள் வரும் நிலையில், சசிகலா சிறையிலிருந்து விடுதலையாக இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2017-பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்பாக, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, மூன்று முறை தரையில் ஓங்கி ஓங்கி அடித்து சத்தியம் செய்து விட்டு போனவர், மீண்டும் அதே ஜெ . சமாதிக்கு சென்றுவிட்டு, தன் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க போகிறார் என்கிறார்கள். சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடிஅபராதத்தையும் சில தினங்களுக்கு முன்பு அவரது பெயரில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது