நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. இந்நிலையில்,கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பு நிறுவனமான வி. கிரியேஷன்ஸ் பட நிறுவனம் பெயரில் போலி ட்விட்டர் ஒன்றில் ‘வாடிவாசல்’ கைவிடப்பட்டது என்ற தவறான தகவல் வெளியானது.. இது உடனடியாக கலைப்புலி எஸ் தாணுவின் கவனத்துக்கு வர, அவர் உடனடியாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல. என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். ‘வாடிவாசல்’ பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும். வாகை சூடும்”என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தயாரிப்பாளர் தாணுவின் பெயரிலான ‘போலி’ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் (@VetriMaaran) இயக்கத்தில்
சூர்யா (@Suriya_offl) நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்🙏🏽 #Vaadivasal #StopSpreadingFakeNews— Kalaippuli S Thanu (@theVcreations) November 28, 2020