நாகரீகமுடன் எதிரணியினரை தாக்குவது என்பது அரசியல் தலைவர்களில் எல்லோருக்கும்பொருந்திப்போவதில்லை. எந்த மேடையாக இருந்தாலும் நாசூக்காக சொல்லுவதில் கலைஞருக்கு நிகராக யாருமில்லை. அது ஒரு அருட்கொடை என்றும் சொல்லலாம் .
இன்றைய தலைவர்களில் யாருக்குமே அத்தகைய திறமை இல்லை என்பது வருத்தப்படக்கூடியதாகும்.
தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியை, மற்ற நாட்களை விட சனி ஞாயிறு மட்டும் அதிகப் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். தொடர்ச்சியாக சீரியல்களை பார்க்கிற பெண்கள் கூட சனி ,ஞாயிறுகளில் பிக்பாஸ் பார்க்கிறார்கள்.
காரணம்,மக்கள்நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன்.
சமயங்களில் திறமையாக தனது அரசியல் சார்ந்த கருத்துக்களை சொல்லிவிடுகிறார்.
இந்த ஞாயிறு மிகவும் சாமர்த்தியமாக ஒரு கருத்தினை பதிவு செய்து விட்டார்.
“தலைமையில் இருக்கும்போது ஜெயிலுக்கு போயிருக்கீங்க.தலைமையில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டு பார்வையாளர்களை பார்த்து “நான் இந்த வீட்டில் இருப்பவர்களை பத்தி சொன்னேங்க” என முகத்தை பவ்யமாக காட்டிக்கொண்டது யாரை சொல்கிறார் என்பதை காட்டியது. அந்த வார்த்தை விளையாட்டு வீ ட்டுத் தலைவராக இருந்த ரியோவைப் பற்றியதுதான் என்றாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ,விடுதலையாகி வருகிற சசிகலா இருவரையும் குறிக்கும் என்பது கவனிக்கத் தக்கதாகும்.