உலகநாயகன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ’இந்தியன்’ பட கதாநாயகிகளில் ஒருவராகவும்,கமலின் சாணக்கியன் படத்திலும் நடித்தவர் இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் திடீரென இணைந்த அவருக்கு உடனடியாக அந்த தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது.
மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதால் , தான் தோற்றதாக புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஊர்மிளா மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவர் மகனும் அமைச்சருமான ஆதித்யா ஆகியோர் முன்பு, சிவசேனா கட்சியில் நாளை சேர உள்ளார். அவருக்கு சிவசேனா, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளதாம். சிவசேனாவின் பரிந்துரைக்கு ஆளுநர் கோஷியாரி ஓப்புதல் வழங்கிவிட்டார் என்கிறது அக்கட்சி வட்டாரம் .