ஒட்டு மொத்த திரையுலகையே பரபரப்புக்குள்ளாக்கிய ‘பாகுபலி’பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில்,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். (‘இரத்தம் ரணம் ரெளத்திரம்)’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்பட பலர் நடிக்கின்றனர்.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கடும் குளிரிலும் தற்போது, 50 நாட்கள் இரவில் மட்டும் தொடர்ந்து நடத்திய பிரம்மாண்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பை (ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது சண்டைக்காட்சி)முடித்துவிட்டதாகவும்,படப்பிடிப்பின் போது நிலவி வந்த கடும் குளிரின் கொடுமை எந்த அளவுக்கு இருந்தது என்பதை விளக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
No one can escape the cold winds with out these on set heaters 🔥
Throwback to last week’s midnight shoots! #RRRDiaries #RRRMovie pic.twitter.com/bFmYqC9low
— RRR Movie (@RRRMovie) November 16, 2020