நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில்,முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இன்று காலை இணைந்துள்ளார்.உடனடியாக அவருக்கு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு, பணி ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய ஆட்சிப் பணி அனுபவமுள்ள சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது “தமிழகத்தின் பெருமை” உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.