சார்பட்டா பரம்பரை என்கிற பெயரில் பீம்ஜி தயாரிக்கிற படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.இதில் இதில் கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார்.
இவர்களுடன்,நடிகர் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.முரளி ஒளிப்பதிவில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.