அரசியலில் தீவிர கவனம் செலுத்தியதால் கேப்டன் விஜய்காந்தினால் திரை உலகில் கவனம் செலுத்த இயலாமல் போனது.
தற்போது உடல் நலமும் சுற்றுப்பயணத்துக்கு உகந்ததாக இல்லை என்பதாக அவரது நெருங்கிய வட்டம் சொல்கிறது. இதனால் விஜயகாந்தின் மனைவி அரசியலில் தனிக்கவனம் செலுத்துகிறார்.
கேப்டனின் மகன்கள் விஜயபிரபாகரன் (மூத்தவர்.) இளைய மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
சண்முகபாண்டியன் ’சகாப்தம்’, ’மதுரைவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் இல்லை. சரியான கதைகள் இல்லாததால் மக்களின் கவனத்தைப்பெற முடியவில்லை. மூத்த மகன் விஜய பிரபாகரன் இதுவரை பிசினஸ் மற்றும் தந்தையின் அரசியலில் மட்டும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் திரைப்படத்திலும் நடிக்க தற்போது களமிறங்கிவிட்டார்.என் உயிர் தோழா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜெப்பிரி ஜோனதன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் பிரபாகரன் பாடகராகவும் அறிமுகமாகிறார்
இது தொடர்பாக கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டரில் .”தமிழரை என்னுயிர் என்பேன் நான்..
.” தமிழ்இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிறார் விஜயபிரபாகரன்..! இதோ உங்களின் என் உயிர்த் தோழா! Firstlook Poster” என பதிவிட்டிருக்கிறார்.