எப்படியெல்லாம் ஒரு படத்துக்கு ஊட்டம் கொடுக்கவேண்டியதிருக்கிறது. பத்திரிகைகளுக்கு பரபரப்பு செய்தி கொடுப்பதற்காக விதம் விதமாக சிந்திக்கிறார்கள்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது கரண்ஜோகர் படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.இவர்களைப் பற்றி ஏற்கனவே கிசு கிசு இருந்துவருகிறது.
அண்மையில் இவர்கள் இருவரும் ஒரு பில்டிங்கில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவர்களை சேர்த்து படம் பிடிப்பதற்காகவே வெளியே மறைவாக காத்திருந்தார்கள் புகைப்படக்காரர்கள்.
ஆனால் அங்கேதான் தயாரிப்பாளரின் விளம்பர யுத்தி டாலடித்தது.
ஜான்வி கபூரை பின்பக்க கேட் வழியாக அனுப்பி வைத்து விட்டார். கார்த்திக்கை முன்பக்க வழியாக அனுப்பி வைத்தார்.
பத்திரிகைகளில் இப்படி செய்தி வந்தது. “கதாநாயகி பின்பக்க கேட்டை தாண்டிக்குதித்தார். நாயகன் மாட்டிக்கொண்டார்.!”
எப்படி சாமர்த்தியம்.!