இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இப்படத்திற்கு பின், சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மீண்டும் ‘நானும் ரவுடி தான்’பட கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார்.இதில் இன்னொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கவுள்ளதால் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.”இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் கதை சுவாரஸ்யமானது. நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கும், படப்பிடிப்பில் பங்கேற்க நான் ஆவலாக இருக்கிறேன். எனது கதாபாத்திரம் வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்” என நடிகை சமந்தாவும் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது, அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து நடிகை சமந்தா வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சமந்தாவின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் விக்னேஷ் சிவன் தான் என்கிறார்கள் சமந்தாவுக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட பல காட்சிகளை குறைத்து, நயன்தாரா சம்பந்த பட்ட காட்சிகளை அதிகரித்து சமந்தா கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை ஏனோ தானோவாக்கி விட்டது தான் என்கிறது சமந்தா வட்டாரம். தற்போது தயாரிப்பு தரப்பில் சமந்தாவை சமாதான படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்