தேர்தல் முடிந்ததும் புதிய தலைவர் முரளி ராமநாராயணன் கையில் இருக்கிற அதிகார சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கிறார்.
இந்த சாட்டை புதிதாக தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்கிற அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிற டி.ராஜேந்தர், நடப்புத் தயாரிப்பு சங்கத்தலைவர் பாரதிராஜா ஆகிய இருவருக்கும் எதிராக தூக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் வி.பி.எப். கட்டணம் கட்ட இயலாது என்கிற நிலைப்பாட்டினை குறிப்பிட்டு டிஜிட்டல் புரவைடிங் நிறுவனங்களுக்கு புதிய சங்கம் சார்பாக கடிதம் எழுதப் பட்டுள்ளது
மேலும் திங்கட்கிழமை நடைபெற உள்ள செயற்குழுவில் வி.பி.எப். கட்டணம் குறித்து விரிவாக ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
நமது சங்கத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் . சங்க நலனிற்கும். சக தயாரிப்பாளர்களின் நலனிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் சரி , யார் செயல்பட்டாலும் சரி அவர்கள் மீது சங்க விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நிர்வாகம் தயங்காது என்று உறுதி பட கூறிக்கொள்கிறேன்.
நமது சங்கம் .. நமது வலிமை.. நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். ஒன்று படுவோம் உயர்வடைவோம்.”என்றும் அவர் கூறியுள்ளார்.