‘தலைவி’படப்பிடிப்பு முடிந்து விட்டது.
ஜெயலலிதா இறந்து நான்காண்டு கடந்து விட்டது. “கொலைசெய்யப்பட்டாரா?” என்பது பற்றி ஆராய அமைத்த கமிட்டி இன்னும்……!
அறிக்கை அளிக்கவில்லை. ஆராய்ச்சி முடிந்ததா என்பது பற்றியும் தெரியவில்லை. முழுமையாக சாட்சிகள் விசாரிக்கப்பட்டனரா ,விவரம் என்ன என்பதும் தெரியவில்லை. இனிமேல் எப்படி முடிவு வந்தாலும் அது எந்த விளைவினையும் ஏற்படுத்தப்போவதில்லை.
ஆனால் இயக்குனர் ஏஎல் .விஜய் ‘தலைவி ‘படப்பிடிப்பினை முடித்து விட்டு அடுத்த கட்ட பணிகளில் இறங்கிவிட்டார்.
ஜெயலலிதாவின் மரண நாளையொட்டி கங்கனா ரனாவத் சில படங்களை வெளியிட்டிருக்கிறார்.
சட்டசபை வளாகத்தில் சக அமைச்சர்களுடன் பைலுடன் நடந்து வருவதைப்போலவும் கட்சிக்காரர்களிடம் பேசுவதைப் போன்ற படங்களையும் வெளியிட்டு தன்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.