சர்ச்சைகள் ,விவாதங்களுக்கு மத்தியில் புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாக கூறியுள்ள ரஜினிகாந்த் பெங்களூரு சென்றிருக்கிறார்.
மூத்த அண்ணன் விரைவில் 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார். அதற்கு முன்னதாக அவரிடம் தன்னுடைய பிறந்த நாளையொட்டி அவரது வாழ்த்துக்களை பெற்றிருக்கிறார் ரஜினி.
சில நாட்கள் பெங்களூருவில் தங்கிவிட்டு பிறகு ஹைதராபாத் சென்று ‘அண்ணாத்தே ‘படத்தை நடித்து முடித்துக் கொடுக்கிறார்.
டிசம்பர் 31 -ல் கட்சி ஆரம்பிப்பது பற்றிய முழு விவரங்கள்.
பின்னர் ஜனவரியில் புதிய ஆன்மீக அரசியல் கட்சி ஆரம்பம்.
கட்சியின் கொள்கை கோட்பாடுகளை விவரமாக அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இந்தியா முழுமையும் இருக்கிறது. ஆனால் பாஜகவின் கொள்கைகளைத் தழுவியதாகவே ரஜினியின் ஆன்மீக அரசியலும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.