அவர் மேலும் கூறியதாவது:
“தேர்தலில் மின் வெட்டு ஏற்படவில்லை ஆனால் கேபிள் கட் ஆனது. எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதித்து வாதாடவும் , போராடவும் நான் தயார் . தலைவா வா , தலைமை ஏற்க வா என என்னை அழைத்ததன் காரணமாக தனி சங்கம் கண்டுள்ளேன்.
*சங்கத்திற்கு நிறுவனர்களாக நானும் , உஷா ராஜேந்தர் இருவரும் இருக்கிறோம் , மேலும் தலைவராகவும் நான் இருக்கிறேன்*. சுபாஷ்சந்திரபோஷ் , ஜேஎஸ்கே இருவரும் செயலாளர்கள்,
பொருளாளர் கே.ராஜன் , துணைத் தலைவர் பி.டி.செல்வக்குமார் .
அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் சங்கத்தின் பெயர்ப் பலகையே தவறாக இருந்தது, இது இறைவன் அவர்களுக்கு தந்த தண்டனை.
பாம்புக்கே பதறாதவன் நான், எறும்புக்கும், பல்லிக்கும் அஞ்சுவேனா..?
அண்மையில் வெளியான கன்னிராசி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் 40 சதவீதம் வரை விபிஎப் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது , அதை யாரும் தட்டி கேட்கவில்லை. இதை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நான் நடத்துவேன்.
சங்கம் என்றால் அதில் அறிவாளி , போராளி , பயனாளி என அனைவரும் இருக்க வேண்டும். விசால் தலைமையில் 2018ல் முத்தரப்பு கூட்டம் போட்டு விபிஎப் கட்டணம் குறித்து பேசினார்கள் . ஆனால் எந்தப் பயனும் இல்லை.
*தீபாவளிக்கு திரையரங்கை திறக்க கோரியவர்கள் கூட்டம் வராதது பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை*. திரையங்கிற்கு 8 விழுக்காடு உள்ளாட்சி வரி விதிக்கப்படுவதை எதிர்த்து எந்த சங்கமும் குரல் கொடுக்கவில்லை.
திரைப்படங்களுக்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது.
*திரையரங்கில் வாங்கும் டிக்கெட் ஒன்றில் 30 ரூபாயில் 4 ரூபாய் அந்த திரையரங்கின் பராமரிப்புக்காக வழங்கப்படும்* என்ற நிபந்தனை கொண்டுவரப்பட்டபோது அதை ஒப்புக் கொண்டவர் தலைவராக இருந்த விசாலும் , மற்றொரு செயலாளரும்.
சிலம்பரசனின்எஸ்.டி .ஆர் பிக்சர்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் எங்களுடன் இணைந்துள்ளன. மேலும் பல தயாரிப்பு நிறுவனங்கள் இணைய உள்ளன.
திமுக உடைந்து அதிமுக உருவானது. சங்கம் உடைவது புதிதல்ல, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு , கிறிஸ்து பிறந்ததன் பின்பு என்பதுபோல தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு முன்பு , தேர்தலுக்கு பின்பு என என்னுடைய நடவடிக்கையை பிரித்து பாருங்கள்.
இப்போது இருக்கும் அரசு அம்மாவின் அரசு என்கிறார்கள் . ஆனால் அவரது வீட்டில் இறுதி நேரத்தில் நடந்த , மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த சிசிடிவி காட்சிகள் இதுவரை வெளியாகவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிசனின் நிலவரம் என்ன ? எனவே நீதிக்காக யாராக இருந்தாலும் போராடித்தான் ஆக வேண்டும். தேர்தலில் எதிரணிக்கு பசும்பாலையும், எங்களுக்கு புட்டிப்பாலையும் தந்துவிட்டார்கள்.
5 ஆண்டுகளுக்குள் படமெடுத்தவர்கள்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பதிவு செய்து , ஒரு காட்சி வெளியிட்ட உத்தமர்கள் செயலாளர் , துணைத் தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். பாம்பு படமெடுத்து ஆடினால்தான் அது பாம்பு , பெட்டிக்குள்ளே இருக்க கூடாது.
*இந்தியாவில் தென்னிந்திய சினிமா புறக்கணிக்கப்படுகிறது, அதை எதிர்த்து கேள்வி கேட்டவன் நான் மட்டுமே.* நான் ஒரு சிங்கம் , என்னை பார்த்து பலர் ஆகட்டும் பங்கம். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் என் நடவடிக்கையை காத்திருந்து பாருங்கள். எனக்கென தனித்தன்மை உண்டு, ஒரு தலை ராகம் எத்தனை பெரிய வெற்றியடைந்தது தெரியுமா? தாயகம் மறுமலர்ச்சி கழகம் எனும் பெயரில் பர்கூரில் ஜெயலலிதாவையே எதிர்த்து களம் கண்டவன் நான். என்னை பழைய டி.ஆராக மாற்றிவிட்டார்கள்.”என ஆவேசம் பொங்க பேசியிருக்கிறார்.