பாகுபலி படத்தை தொடர்ந்து,ராஜமவுலி இயக்கி வரும் புதிய படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.இவர்களுடன்,ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி,இந்தி நடிகர் அஜய் தேவ்கன், நம்ம ஊர் சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் படம் உருவாகி வருகிறது. இதில் ராம் சரண் மனைவியாக, சீதா என்ற கேரக்டரில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் நேற்று அவர் இணைந்துள்ளதாக ஆலியாபட் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆலியாபட்டுடன் 4 பவுன்சர்கள், 1 மேக்கப் ஆர்ட்டிஸ்ட், 1 அசிஸ்டன்ட், 1 ஹேர் ஸ்டைலிஸ்ட் , 1 காஸ்டியூம் டிசைனர் மற்றும் மேனேஜர் ஒருவர், டிரைவர் என அவரின் 10 உதவியாளர்களும் ஐதராபாத் வந்துள்ளனராம். இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திரஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் உணவு மற்றும் தங்குவதற்கான செலவுகள் மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் என்கிறார்கள்.இது பணத்தை தண்ணீராக செலவழிக்கும் தயாரிப்பு தரப்புக்கே ஆலியா பட்டின் உதவியாளர்களின் ‘வெட்டி பந்தா’ கண்ணை கட்டுகிறதாம்..