தமிழகத்தில் கொரோனா தோற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டு, சமீபத்தில் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக மீண்டும் திறக்கப்பட்டது. வி.பி.எப் கட்டண விவகாரம் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கும்,படத்தயாரிப்பாளர்களுக்கும், கியூப் நிறுவனத்திற்குமான மோதல் பெரிய அளவில் வெடித்ததால் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையில்,திரையரங்குகள் மூடப்பட்ட சமயத்தில வெளியான சில படங்களும், சில புதுப்படங்களும் வெளியானாலும், மக்களிடையே கொரோனா அச்சம் முழுவதும் நீங்காததால் பெரிய அளவில் திரையரங்குகளுக்கு அவர்கள் வரவில்லை.சூர்யா நடித்தா சூரரைப்போற்றுநயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட் ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில், ‘நிவர்’ புயல் காரணமாக பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அறவே வராததால் தமிழகம் முழுவதும் ஏற்கனவே சில திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில்,தற்போது சுமார்500 திரையரங்குகள் பொங்கல் வரை அடுத்த இரண்டொரு நாட்களில் மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகையில் , மக்கள் கூட்டம் வராம தியேட்டரை திறந்து என்ன பயன்?கரண்ட்பில், வேலையாட்களுக்கு சம்பளம் இதையாவது மிச்சப்படுத்தலாமே என்ற ஆசை தான். எல்லா பிரச்சனைகளும் பொங்கலுக்குள் தீர்ந்து விடும் என நம்புகிறோம் பெரிய நடிகர்கள் படங்கள்,நல்லகதையம்சம் உள்ள படங்கள் தியேட்டருக்கு வந்தால் மக்கள் கூட்டம் மீண்டும் வருவது உறுதி என்கிறார்.