அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது குறித்து மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,’கையாலாகாத அரசு எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ?’ என ஆவேசமாக பதிவிட்டுள்ள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
“இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா?
நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.மழைக்காலத்திற்கென திட்டமிட்டிருந்தால், ஆபத்தான கால்வாயென எச்சரிக்கை வைத்திருந்தால், சாலையில் விளக்கு எரிந்திருந்தால், மருத்துவர் கரோலின் பிரிசில்லாவையும் மகள் எல்வினையும் இழந்திருக்க மாட்டோம். கையாலாகாத அரசு எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ?” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.