டிவிட்டர் தளத்துக்கு கவுண்டமணி வந்திருக்கிறாரா?
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து விட்டதாக டிவிட்டரில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் ஆகி இருக்கிறது
சுப்பிரமணி கருப்பையா என்கிற பெயரை பிராக்கெட் பண்ணி கணக்கு ஓப்பன் ஆகி இருக்கிறது..ஆங்கிலத்தில் கவுண்டமணி.
இதில் என்ன வேடிக்கை என்றால் அவரும் ரஜினிகாந்தும் ஒன்றாக அமர்ந்து குடிப்பது மாதிரியான படமும் வெளியாகி இருக்கிறது.அந்த காலத்து பழைய படம்.
இம்மாதிரியான படத்தை கவுண்டமணி வெளியிட மாட்டார் என்பது நூத்துக்கு நூறு சத்தியமான உண்மை.
கவுண்டமணி வீட்டுக்குப் போன் செய்தபோது “நான் எந்தவிதமான சோசியல் மீடியாவிலும் இல்லை “என்கிற பதில்தான் அழுத்தம் திருத்தமாக வந்தது.
இனி போலீஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.