விஷால்-சுந்தர்.சி. இணைந்து எடுத்த மதகதராஜாவுக்கு இப்பதான் விமோசனம் கிடைச்சிருக்கு என்கிறார்கள். படம் எடுத்த ஜெமினி லேப் பலவித சிக்கல்களை சந்தித்து தற்போதுதான் விடுபட்டிருக்கிறது. மீண்டிருக்கிறது என்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளை பொட்டிக்குள்ளேயே கிடந்த அந்த படத்தை புத்தாண்டுக்குள் கொண்டு வருகிற முயற்சி நடக்கிறது. விஷால் ,சோனு சூட் ,கலாபவன்மணி ,சந்தானம் ,அஞ்சலி ,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கிற இந்த படத்தை சுந்தர் சி. இயக்கி இருந்தார்.
விஷாலின் சக்ரா படமும் ரிலீஸ் ஆகிறது. ஓடிடி தளம் என்று வந்த தகவல்கள் வெறும் வதந்திதான் ,நேரடி தியேட்டர் ரிலீஸ் என்கிற தகவலை தியேட்டர் சங்க செயலாளர் ஸ்ரீதரும் உறுதி செய்திருக்கிறார்.