வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு மீண்டும் தனுசுடன் இணைந்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாரித்து வரும் புதிய படம், கர்ணன். இதில் தனுசுடன் ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு கௌரி கிஷன், லட்சுமிப்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.கொரோனா லாஃடவுனுக்கு பிறகு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் தற்போது நிறைவடைந்துள்ளது.
இது குறித்து கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,”இத்தகைய கடும் சூழலிலும் கர்ணன் படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்லபடியாக முடித்து தந்தமைக்கு நடிகர் தனுஷ், இயக்குனர் மாரிசெல்வராஜ்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கர்ணன் திரைப்படம், அசுரவெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.என பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது,” கர்ணன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.. இந்தப் படத்தை கொடுத்த மாரி செல்வராஜுக்கும் ஆதரவு அளித்த வி கிரியேஷன்ஸ் தாணு சாருக்கும், படக்குழுவினருக்கும் மிக்க நன்றி. இந்தச் சிறப்பான படத்துக்கு அற்புதமான இசையை அளித்துள்ள சந்தோஷ் நாராயணனுக்கு சிறப்பு நன்றி என கூறியுள்ளார்.
இயக்குனர் மார்செல்வராஜ் தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளதாவது,, ” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான, முக்கியமான ஒரு திரைப்படம் கர்ணன். இந்த நெருக்கடியான நிச்சயமற்ற காலகட்டத்தில் இத்திரைப்படம் என்னிடம் இருந்தும் என்னுடன் பயணித்தவர்களிடம் இருந்து பெரும் விடாமுயற்சியை எதிர்ப்பார்த்தது. அனைவரையும் அரவணைத்து அதை சாத்தியமாக்கிய தனுஷ், தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் உதவி இயக்குநர்கள், எனது கிராமத்து மக்கள் என அனைவருக்கும் நன்றி” என்றும் என் நினைவிலிருக்கும் பயணத்தைச் சாத்தியமாக்கியதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்”.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.