நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை இன்று பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே எல்லா பதிவுகளும் முடிந்து விட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வருகிறவரை இம்மாதிரியான செய்திகள் ரசிகர்களைக் கவர பயன்படும் என்பது உண்மைதான்.!
ரஜினியின் புதிய கட்சி இன்று டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டால் ரஜினிகாந்த் நாளை தனது பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக கட்சி பெயரை அறிவிப்பார் என நம்பப்படுகிறது.ஆனால் டிசம்பர் கடைசியில்தான் முக்கிய அறிவிப்புகள் வரும் என்பது முன்னரே ரஜினி சொல்லியிருக்கிற வாக்குறுதி.!
கடந்த சில நாட்களாக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தி வந்தார்கள்.
கட்சிக் கொடியில் வெள்ளை நிறம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. பெயரை பதிவு செய்ததும் ஒவ்வொரு ஊராக ரஜினி கட்சியை பிரபலப்படுத்த அவரது கட்சியினர் தயார் நிலையில் உள்ளனர்.மேலும், சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட அவரது மக்கள் மன்ற நிர்வாகி கள் வற்புறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கொடி நீல நிறத்தில் உள்ளது. அதில் நட்சத்திரமும் இடம் பெற்றுள்ளது.