ரவுடி பேபி வழியாக உலகின் கவனத்தை ஈர்த்தவர் சாய் பல்லவி.
அந்த பாடல் உலக அளவில் தனிப்பெரும் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இவருக்கு வினோதமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
அதை அவரே சொல்கிறார் கேளுங்கள்.!
“நான் ஒரு படத்தில் நடித்தபோது வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது .படத்தின் டைரக்டர் என்னிடம் ஒரு முத்த காட்சியில் நடிக்கவேண்டும் என்று கேட்டார். அதுவும் உதட்டுடன் உதடு பொருத்தி.!
நான் மறுத்து விட்டேன். ஆனாலும் அவர் விடாமல் வற்புறுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த அந்த படத்தின் ஹீரோ டைரக்டரைப் பார்த்து “நீங்க என்னை மீ டூ பிரச்னையில் சிக்கவைக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது” என்று சொன்னதும் அந்த முத்த பிரச்னையை அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைத்து விட்டார். ஒரு வகையில் லிப் லாக்கில் இருந்து என்னை மீ டூ காப்பாற்றியது என்று சொல்லலாம்” என்று சிரித்தார் .