நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி,அரசியல் பிரபலங்களில் முதல் ஆளாக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில், பிரதமர் மோடி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்உள்பட பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ” இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும், சக திரை கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்த நாளை கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்”. என பதிவிட்டுஉள்ளார்.
மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்த பிரதமர் மோடி யின் வாழ்த்து பதிவை ரஜினிகாந்த் ‘ரீ ‘டுவிட் செய்து தனது நன்றியை அவருக்கு தனியாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.