இது என்ன தற்கொலை ஆண்டா?
அடுத்தடுத்து நடிகைகளின் தற்கொலை ! தொடர்கதையாக நீள்கிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை ! 16 ஆவது நாள் காரியம் கூட முடியவில்லை.
அதற்குள் இன்னொரு நடிகை படுக்கையில் பிணமாக கிடந்திருக்கிறார்.
சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குப் பிறகு திரை உலக பிரபலங்களின் மரணம் அடிக்கடி செய்தியாகிறது.
பாலிவுட் நடிகை ஆர்யா பானர்ஜி. கொல்கத்தா சொந்த ஊர்.
வித்யா பாலன் நடித்திருந்த ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிகை ஷகிலா கேரக்டரில் நடித்திருந்தார்.
ஷகீலாவைப் போல ஆர்யா பானர்ஜியும் பிரபலம் ஆனார்.!
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனித்த வாழ்க்கை.
சம்பவத்தன்று கதவு திறக்கப்படாமல் இருக்கவே காவலாளிக்கு சந்தேகம்.
கதவை பல முறை தட்டியும் திறக்கப்படவில்லை.
சந்தேகத்தின் பலனாக போலீஸ் வந்து கதவை திறந்து உள்ளே சென்றால்?
ஆர்யா பானர்ஜி மூக்கில் வழிந்த ரத்தமுடன் படுக்கையில் பிணமாக கிடக்கிறார்.
தற்கொலையா? ஹார்ட் அட்டாக்கா?
போலீஸ்தான் முடிவு செய்யும்.