இயக்குநர் பாலா .
கவனத்தில் கொள்ள வேண்டிய படைப்பாளி. கடினமான ஆள். உடம்பு குச்சி போல மெலிந்து இருந்தாலும் உள்ளம் உருக்குப் போன்றது.
வளைந்து போகமாட்டார். இவரது கற்பனையில் விளையும் கதைகள் மேகமலைப் பயணம் போன்று இருக்கும்.
எல்லாம் இயல்பாகவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர். அதில் சர்வாதிகாரம் இணைந்து கிடக்கும்.
விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளிவரவேண்டிய வர்மாதான் அவர் இயக்கிய கடைசிப்படம்.
அதன் பிறகு என்ன ஆனது?
உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார் என்றார்கள் .
பின்னர் உதயநிதி ,ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கிற ஒரு படம் என்கிறார்கள்.
ஆனால் எதுவும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.
ஆனால் அடுத்த படத்துக்கு இசை அமைக்கப்போகிறவர் இசை ஞானி இல்லை, இசைப்புயல் என்கிறார்கள்.
நாம் விசாரித்தவரை ஏஆர் ரகுமானை பாலா சந்தித்தது உண்மை என்பது நிஜம்.
ஏன் இளையராஜாவை விட்டு விலகினார் , அல்லது தவிக்கிறார் என்பது தெரியவில்லை.