கொரோனா பாதிப்பால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்குமார் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
இது குறித்து அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,” அப்பா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் குறைந்தது 10 நாட்களாவது அவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ குடும்பததிற்கும் தன்னலம் கருதாது சேவை புரியும் செவிலியர்கள் உள்பட அனைவருக்கும்எங்கள் குடும்பத்தின் சார்பாக உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அப்பாவின் உடல்நிலையை கண்காணித்து எங்களுக்கு தகவல்களை கொடுத்தனர். அவர்களுக்கு மிக்க நன்றி .மருத்துவர்களின் கவனிப்பே அப்பா என்று நலமுடன் இருக்க காரணம். அடுத்த 15 நாட்கள் இந்த கொடிய வைரஸை எதிர்த்து அப்பா தன் உடலை பலப்படுத்திக் கொள்ள மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும்.
நண்பர்கள் உறவினர்கள் சினிமா மற்றும் அரசியல் சார்ந்த நண்பர்கள்,அப்பாவின் ரசிகர்கள், கட்சி உறுப்பினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் என அனைவரின் பிரார்த்தனைகளும் தான் இந்த கடினமான காலத்தை கடந்து வர எங்களுக்கு துணை நின்றது. கொரோனா வைரஸ் மிக கொடுமையானது .
தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். நம் குடும்பத்தை சார்ந்தவர் பாதிக்கப்படும் போது தான் அதன் உணர்வீர்கள். முக கவசம் அணியுங்கள். தேவை என்றால் மட்டும் வெளியே செல்லுங்கள். எங்கள் குடும்பம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் என்பதை உங்களின் அன்பின் மூலம் உணர்ந்து கொண்டோம். அன்புடன் வரலட்சுமிசரத்குமார் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.